எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் உருவாக்கப்படவிருக்கும் புதிய அரசியல் கூட்டணிக்கு, ஆதரவளிப்பதற்கு பலரும் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தவகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டாம் நிலை தலைவர்களும் சஜித்திற்கு ஆதரவளிக்கவுள்ளனர்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பலரும் புதியக் கூட்டணிக்கு ஆதரவளிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் மைத்திரியின் இந்த அறிவிப்பானது ஜனாதிபதி கோட்டாபாயவிற்கு பெரும் கலகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கே ஆதரவு வழங்கியிருந்தார்.
இவ்வாறான நிலையில் எதிர்வரும் பொது தேர்தலிலும் மைத்திரியின் சுதந்திரகட்சியின் இணைந்து ஆட்சி அமைக்கலாம் என கோட்டாபய எதிர்பார்த்திருக்க , மைத்திரியோ சஜித்தின் புதிய கூட்டணிக்கு ஆதரவளிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை கோட்டாபயவுக்கு கலகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.